மோசமான சர்ச்சைகளுக்கு பின் மனைவி உடன் மீண்டும் சேர்ந்த ரஜினி பட வில்லன்
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் நவாஸுதீன் சித்திக். ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகரான அவர் கடந்த வருடம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதற்கு காரணம் அவரை பிரிந்து சென்ற மனைவி தான்.
விவாகரத்து வழக்கு ஒருபக்கம் பல வருடங்களாக நடந்துகொண்டிருக்க, தன்னிடம் பணம் பறிக்க பல்வேறு மோசமான விஷயங்கள் செய்கிறார் என மனைவி மீது நவாஸுதீன் சித்திக் புகார் கூறினார்.
இருவரும் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவுகளும் பரபரப்பாக பேசப்பட்டன.
மீண்டும் இணைந்தனர்
இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நவாஸுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர்.
"குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம். பிரச்சனைகளுக்கு காரணம் மூன்றாம் நபர் தலையீடு தான். இனி அது இருக்காது" என ஆலியா பதிவிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் தங்கள் 14ம் திருமண நாளை ஒன்றாக கொண்டாடிய போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
