அடுத்தடுத்து நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள 2 படங்கள், வெளியான சூப்பர் தகவல்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.
கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகை நயன்தாரா, நடிக்க உள்ள அடுத்த 2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க உள்ளார்.
இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது.
இதேபோல் மற்றொரு படத்தை இயக்கப்போவது யார்?, அதில் நயன்தாராவுடன் நடிக்க உள்ள நடிகர்கள் யார்? என்பது குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.