5 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ள நடிகை நயன்தாராவின் திரைப்படம், என்ன படம் தெரியுமா?
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான அதிகளவில் ரசிகர்கள் வட்டம் காண படுகிறது.
கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.
இந்நிலையில் தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக இவர் நடித்த படம் ‘ஆறடுகுலா புல்லட்’. சுமார் ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் கிடைத்தது.
மேலும் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
அதுமட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.