நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு எழுந்த புகார்- ரசிகர்கள் ஷாக்
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இளம் ஜோடி. இவர்கள் இருவரும் நானும் ரவுடித்தான் படத்தின் காலத்தில் இருந்தே காதலர்களாக வலம் வருகிறார்கள்.
கடந்த ஜுன் 9ம் தேதி தான் படு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்டில் நடந்தது. அவர்களின் திருமணத்திற்கு குறிப்பிட்ட பிரபலங்களே வந்தார்கள், அவ்வளவு பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தார், மற்றபடி ஒரு புகைப்படம் கூட கசியவில்லை.
திருமணத்தால் எழுந்த புகார்
இவர்களது திருமணம் கடற்கரையில் என்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டார்கள். கடற்கரை பொடு இடம் என்பதால் தடை விதித்தது தவறு என்று புகார் எழ அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
ஏற்கெனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஆன அடுத்த நாள் திருப்பதி சென்று அங்கு கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற விவகாரத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் உள்ள காமெடி நடிகர் வடிவேலுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க