நயன்தாராவிற்கு நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டையா.. உடைத்து பேசிய நடிகை நயன்
நடிகை நயன்தாரா - நமிதா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
நயன்தாராவின் திரை பயணத்தில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று பில்லா. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் நயன்தாரா மற்றும் நமிதா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பார்கள்.
பில்லா படம் வெளிவந்த காலகட்டத்தில் நயன்தாராவிற்கும், நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டை என்பது போல் பல தகவல்கள் வெளிவந்தது.
இது தான் பிரச்சனையா
இந்நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் நயன்தாராவிடம் கேள்வி கேட்ட போது, " பில்லா படப்பிடிப்பு ஆரம்பம் ஆனபோது, இருவரும் சகஜமாக தான் பேசிக்கொள்வோம். ஆனால், அதன்பின் சில நாட்களில் என்னிடம் அவர் பேசாமறுத்துவிட்டார். அனைவரிடமும் பேசும் நமிதா, என்னிடம் மட்டும் பேசவமாட்டார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. நானும் ஏன் என்னிடம் பேச மாடீர்களா என்று நமீதாவிடம் கேட்டக்கவும் இல்லை. அதனால், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டோம் " என்று கூறியுள்ளார்.
இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயமாக இருந்தாலும், தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
