பட புரொமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகி இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களுக்கு இணையான வியாபாரம், வசூலை பெறுகின்றன.
இந்த வருடம் அவருக்கு ஸ்பெஷலானது, காரணம் திருமணம், குழந்தை என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.
தற்போது அவரது நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது, அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் பாலிவுட் நடிகர் அனுபம்கேர், நடிகர் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காரணம் சொன்ன நயன்தாரா
இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, நான் சினிமாவில் நுழைந்த நேரத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்கள் வெளியானது இல்லை, பட விழாக்களாக இருந்தாலும் நாயகிகளை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிடுவார்கள்.
ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது. ஹீரோயின்களைப் பற்றி அதிகமா பேச மாட்டாங்க. அதனால் தான் நான் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன்.
ஆனால் இப்போது அப்படி இல்லை, நாயகிகளை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

ஓட்டு வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு மாறியுள்ள பிக்பாஸ் புகழ் ஜி.பி.முத்து- அவரே வெளியிட்ட Home Tour
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri