முதல்மைராசின் மகளாக நடிக்கும் நடிகை நயன்தாரா - யாருக்கு மகளாக தெரியுமா
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.
ஆம் தமிழில் உருவாகி வரும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களிலும், மலையாளத்தில் உருவாகி வரும் நிழல் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார்.
அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர். இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
