ஒரு மாதமாக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!.. எதற்கு தெரியுமா?
நயன்தாரா
நயன்தாரா, இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயும் வரவேற்பு பெற்றுள்ளார்.
அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார்.
ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும், இப்படத்தில் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
எதற்கு தெரியுமா?
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாரா மற்றும் அவர் குழந்தைகள் என குடும்பமே ஒரு மாதமாக விரதமிருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri