நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு.. எப்போ தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது காதலித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் திருமணம் எப்போது என்று தான் ரசிகர்கள் எல்லோரும் கேட்டு வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன், சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான பணிகளில் விக்னேஷ் சிவன் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.
திருமணம் எப்போது
விக்கி நயன் இருவரும் ஏற்கனவே ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து முடித்துவிட்டனர். இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் ரிலீசுக்கு பிறகு வரும் ஜூன் மாதத்தில் அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இருப்பினும் தேதி உறுதியாக தெரியவில்லை. கேரளாவில் அல்லது வெளிநாட்டில் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.