வேற லெவல் பிக்கப் ஆன அன்னபூரணி படத்தின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் நயன்தாரா
அன்னபூரணி
நயன்தாரா நடிப்பில் இதுவரை பல சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வரிசையில் மீண்டும் ஒரு நல்ல படத்தை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். ஆம், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி.
இது நயன்தாராவின் 75வது திரைப்படமாகும். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ஜெய், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வசூல்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அன்னபூரணி திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் ஸ்லோவான வசூல் பெற்று இருந்தாலும் கூட நேற்று, மூன்றாவது நாள் முடிவில் செம பிக்கப் ஆகியுள்ளது.
ஆம், இதுவரை உலகளவில் நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் ரூ. 3.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இரண்டு நாட்களில் ரூ. 1.2 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்த அன்னபூரணி திரைப்படம் நேற்று ஒரு நாளில் மட்டுமே ரூ. 2.3 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியுள்ளது.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
