நயன்தாராவை நடிக்க கேட்ட லெஜண்ட்.. ஆனால் ஹீரோயினாக இல்லை
லெஜண்ட்
தொழிலதிபராக இருந்து அதன் பின் நடிகராக மாறி இருப்பவர் தான் லெஜண்ட் சரவணன். அவரது முதல் படமான லெஜண்ட் பல விமர்சனங்களை சந்தித்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளிவந்து இருக்கிறது. அந்த படத்திற்க்கு அதிகம் views கிடைத்து நம்பர் 1 இடத்தை பிடித்து இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் லெஜண்ட் படத்தை இயக்கிய ஜேடி ஜெரி அளித்த பேட்டியில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி விளக்கம் கூறி இருக்கின்றனர்.
நயன்தாராவை நடிக்க கேட்டது உண்மையா?
நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்ததால் தான் ஹிந்தி நடிகையை கொண்டு வந்தார்கள் என பரவிய செய்தி பற்றி விளக்கம் கொடுத்த இயக்குனர்கள் 'நயன்தாராவை நடிக்க கேட்டது உண்மை தான், ஆனால் ஹீரோயினாக அல்ல, இன்னொரு முக்கிய ரோலில் நடிக்க தான் அவரை அணுகினோம்' என தெரிவித்து இருக்கின்றனர்.
திடீரென ஒல்லியான நடிகர் ரோபோ ஷங்கர்! என்ன ஆனது? போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
