69 வயது நடிகருக்கு ஜோடி.. மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்ட நயன்தாரா
நயன்தாரா
நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. நேரடியாக ஓடிடியில் வெளிவந்த இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
படுதோல்வியை சந்தித்தது. நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi என பல திரைப்படங்கள் உள்ளன.
நயன்தாரா கேட்ட சம்பளம்
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில்அனில் ரவிபுடி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்து, நயன்தாராவிடம் இப்படம் குறித்து பேசியுள்ளனர்.
படத்தின் கதையை கேட்ட நயன்தாராவை நடிப்பதற்கு ஓகே கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வழக்கமாக நயன்தாரா ரூ. 10 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
