நடிக்க வருவதற்கு முன் நடிகை நயன்தாரா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ
நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என நயன்தாரா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. மேலும் நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக, உருவாகியுள்ள Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் நாளை வெளிவரவுள்ளது.
நேற்றில் இருந்தே இந்த ஆவணப்படம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை தான். இந்த விஷயம் தற்போது கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் பார்த்திராத புகைப்படம்
நடிகை நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன் தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர் அப்போது எப்படி இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video