பிரபல தியேட்டரை வாங்கிய நயன்தாரா!.. வெளியான புதிய தகவல்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நயன்தாரா சாய் வாலே என்ற டீக்கடையில் பெரும் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நயன்தாரா பிரபலமாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா என்ற தியேட்டரை வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
மேலும் அந்த தியேட்டர் இருக்கும் இடத்தில் இரண்டு தியேட்டரை கட்டட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய்யும் நேஷனல் என்ற தியேட்டர் ஒன்றை வாங்கி அந்த இடத்தில் புதிதாக தியேட்டர் ஒன்றும் சந்திரா மால் கட்டியது குறிப்பிடத்தக்கது.
பள்ளி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நயன்தாரா.. இதோ புகைப்படம்!