சர்ச்சைகளுக்கு நடுவில் பாப்புலர் இடத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா... எங்கே தெரியுமா?
நயன்தாரா
நடிகை நயன்தாரா, சாதாரணமாகவே அவரை பற்றிய ஏதாவது நல்ல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கும்.
ஆனால் சில தினங்களுக்கு முன் நயன்தாரா வெளியிட்ட ஒரு அறிக்கை தான் இப்போது பரபரப்பின் உச்சமாக பேசப்பட்டு வருகிறது.
தனது திருமண வீடியோவில் நானும் ரவுடித்தான் பட பாடல்களை வைக்க தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆகியும் எந்த ஒரு பதிலும் இல்லை, ஒரு சின்ன BTS வீடியோ பயன்படுத்தியதற்கு அவர் ரூ. 10 கோடி கேட்டதாகவும் அவர் வன்மத்தை வெளிப்படுத்துகிறார் என பெரிய அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா.
இதுகுறித்து தனுஷ் இதுவரை எதுவும் பேசவில்லை, ஆனால் நயன்தாரா பதிவிற்கு நிறைய பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பிறந்தநாள்
இப்படி ஓருபக்கம் பிரச்சனை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வர நயன்தாரா நேற்று (நவம்பர் 18) தனது பிறந்தநாளை கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான 'குதுப்மினாரை' கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்தார் நயன்தாரா. இதோ அந்த புகைப்படங்கள்,

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
