முதல் படத்திலேயே 1000 கோடி வசூல்.. கோலிவுட் முன்னணி நாயகியின் அழகிய சிறு வயது புகைப்படங்கள்
சிறு வயது புகைப்படங்கள்
கோலிவுட் நாயகி ஒருவர் நடித்த முதல் படத்திலேயே ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். பல நடிகர் நடிகைகளுக்கு கனவாக இருக்கும் ஒரு விஷயத்தை எளிதாக நடத்தி காட்டிய இவர் வேறு யாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்.
இவர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இது நயன்தாரா பாலிவுட்டில் நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேஜிஎப் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
