புதிதாக மூன்று படங்களில் கமிட்டான நடிகை நயன்தாரா - செம லைன் அப்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி, நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண்.
இது தவிர, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணைந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.
அதில் ஒரு படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார்.
மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை என்று தெரிவிக்கின்றனர்.