22 ஆண்டுகால திரையுலக பயணம்.. வைரலாகும் நடிகை நயன்தாராவின் உருக்கமான பதிவு!
நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.
கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்துள்ளது. தற்போது, இது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உருக்கமான பதிவு!
அதில், " நான் முதன்முதலில் கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகின்றன, ஆனால் சினிமா என் வாழ்க்கையில் காதலாக மாறும் என்று அப்போது தெரியவில்லை.
ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மௌனமும், என்னை வடிவமைத்தன, என்னை குணப்படுத்தின, என்னை நானாக மாற்றியது. என்றென்றும் நன்றியுடன்" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இதற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.