ஒரே ஒரு முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடிக்காத நடிகை நயன்தாரா.. யாருடன் தெரியுமா
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நயன்தாரா கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், காட் பாதர், கனெக்ட் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், 15 வருடங்களை கடந்த முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது வரை முன்னணி நடிகரான கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.