நயன்தாராவின் ஆவணப் படத்திற்கு மீண்டும் எழுந்த சிக்கல்.. நீதிபதி அதிரடி உத்தரவு!
நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.
கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.
முதலில் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி தனுஷ் நயன்தாராவுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதிரடி உத்தரவு!
இந்நிலையில், தற்போது சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார். மேலும், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.