யோகி பாபு முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. 8 முறை டேக்! யோகி பாபு ரியாக்ஷன் இதுதான்
நடிகர் யோகி பாபு உடன் நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து இருந்தார். நெல்சன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய ஹிட்ஆனது.
அந்த படத்தில் நயன்தாரா உடன் நடித்த அனுபவம் பற்றி யோகி பாபு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். நயன்தாரா நிஜத்திலேயே லேடி சூப்பர்ஸ்டார் தான் என அவர் பாராட்டி இருக்கிறார்.
முகத்தில் கால்
ஒரு காட்சியில் எனது முகத்தில் நயன்தாரா கால் வைப்பது போல இருந்து. அந்த காட்சி வேண்டாம் என நயன்தாரா கூறினார். ஆனால் நெக்லனும் நானும் தான் வற்புறுத்தி நடிக்க சொன்னோம்.
ஏழு அல்லது எட்டி டேக் சென்றது. ஆனால் ஒரு முறை கூட நயன்தாரா காலை என் முகத்தில் வைக்கவில்லை.
என் முகத்தில் அழுக்கு பட கூடாது என்பதற்காக அவர் காலை கீழே தரையில் வைக்காமல் தூக்கியே வைத்திருந்தார் என யோகி பாபு கூறியிருக்கிறார்.