ஷாருக்கான் படத்தில் இருந்த நயன்தாரா விலகல்..? காரணம் இந்த சொந்த விஷயம் தானா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா விரைவில் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்ததை நாம் அறிவோம்.
ஆனால், ஷாருக்கான் தற்போது தனது மகன் போதை பொருள் வழக்கில் சிக்கி இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுபோனதன் காரணமாக, மற்ற படங்களுக்கு கொடுத்த தேதி சிக்கல் ஆகும் என்ற காரணத்தினால், இப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம் நயன்தாரா.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதை நாம் அறிவோம். தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறிவிட்டார்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த வருடத்தின் இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேதி சிக்கல் காரணமாக இருந்தாலும், திருமணம் எனும் முக்கிய காரணத்தினால் தான், ஷாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதில் எது உண்மை என்று நயன்தாரா தரப்பில் இருந்து கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியவரும்.