சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா! இத்தனை கோடியா.. தென்னிந்தியாவில் நம்பர் 1 இவர்தான்
நடிகை நயன்தாரா தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். நயனின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் அந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஜெயம் ரவி படம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஹ்மத் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா மிகப்பெரிய தொகை சம்பளமாக பெறுகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்தனை கோடியா?
வந்திருக்கும் தகவல்களின்படி நயன்தாராவுக்கு 10 கோடி ருபாய் சம்பளமாக பெற இருக்கிறார். அதுவும் வெறும் 20 நாள் கால்ஷீட்டுக்காக தான் இந்த சம்பளம் பெறுகிறார் அவர்.
அது உண்மையானால் நயன் தான் தென்னிந்தியாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க இருக்கிறதாம்.