69 வயது நடிகருக்கு ஜோடியாக நயன்தாரா.. இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா
நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படம் மட்டுமின்றி மேலும் அரை டஜன் படாமல் அவர் கைவசம் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சிரஞ்சீவி ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதை வீடியோ வெளியிட்டு படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.
சிரஞ்சீவி 157
இது சிரஞ்சீவி உடன் நயன்தாராவுக்கு மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியின் 157 வது படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் இந்த படத்திற்காக கேட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா 18 கோடி சம்பளம் கேட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது, இருப்பினும் அவருக்கு தயாரிப்பாளர் கொடுக்க ஒப்புக்கொண்ட சம்பளம் பற்றி தகவல் உறுதியாகவில்லை.
An actress who effortlessly charms the masses and enchants the classes🫶
— Shine Screens (@Shine_Screens) May 17, 2025
The ever graceful queen, #Nayanthara joins the journey of #Mega157 ❤️🔥
Witness her elegance and emotion on the big screen alongside Megastar @KChiruTweets in an @AnilRavipudi Entertainer💥
—… pic.twitter.com/SWW06nkbyn