நயன்தாராவை பார்த்து நடிக்க வந்த பிரபல சீரியல் நடிகை, அவரால் தான்.. நடிகை ஓபன் டாக்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இப்போது ஒரு பிரபல சீரியல் நடிகை நடிக்க வருவதற்கு ஒரு ஆதாரமாக இருந்துள்ளார்.
அந்த நடிகை அவரது படத்தின் விழா மேடையில் தான் இந்த விஷயத்தை கூறியுள்ளார்.‘
யார் அவர்
அறிமுக இயக்குனர் பிரிட்டோ இயக்கத்தில் நிறம் மாறும் உலகில் என்ற படம் தயாராகியுள்ளது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், காவ்யா அறிவுமணி, வடிவுக்கரசி, சுரேஷ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில், ஆம்பூர் எனும் ஊரில் இருந்து ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள், பேருந்தில் பயணிக்கும் போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நகைக்கடை விளம்பரம் வைக்கப்பட்டு இருந்தது.
அதைப்பார்த்ததும் நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள்.
பின் அதற்காக தயார் படுத்திக்கொண்டு குறும்படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என நடித்து ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் சம்பாதித்தாள், அந்தப் பெண் நான்தான்.
முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என இருந்த போது இந்த பட வாய்ப்பு கிடைத்தது என பேசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் காவ்யா அறிவுமணி.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
