மீண்டும் முன்னாள் காதலருடன் இணையும் நயன்தாரா.. அதுவும் இப்படியொரு படத்திலா?
சிம்பு இயக்கிய நடித்திருந்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்த ஜோடி தான் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.
இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர்கள் இருவரும் காதலில் ஈடுபட்ட, அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்தும் தெரிந்தது தான்.
ஆனால் காதல் முறிவிற்கு பிறகு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'இது நம்ம ஆளு திரைப்படத்தில்' ஜோடிகளாக இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்க போகிறார்களாம்.
ஆம் கௌதம் மேனன் இயக்கத்தில் கூடிய விரைவில் சிம்பு காதல் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் ஒரு காதல் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்க போகிறார்கள் தற்போதே சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan