ஜெயம் ரவி - நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படம் இப்படி தான் இருக்குமாம்.. அவரே கூறியுள்ளார்
மீண்டும் அமையும் ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா. இவ்விருவரும் இணைந்து தனி ஒருவன் எனும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நடித்திருந்தார்கள்.
இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா - ஜெயம்ரவி கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி அமைந்துள்ளது. ஆம், அஹமத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நயன்தாராவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கிறார்கள்.
இதை ஜெயம் ரவி ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், இப்படம் ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் படக்குழுவிடம் இருந்து இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
