வெளிநாடு செல்லும் முன் ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா! எப்போ ரிலீஸ் தெரியுமா
அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா மீண்டும் ஜோடி சேரும் படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்திருக்கிறது.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். அகிலன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தற்போது ஐ.அஹ்மத் இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்து வருகிறார் அவர்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக நயன்தாரா ஜெயம் ரவி உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
ஷூட்டிங் நிறைவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வந்த இறைவன் ஷூட்டிங் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு தான் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் பார்சிலோனாவுக்கு ட்ரிப்புக்கு கிளம்பி இருக்கிறார்.
படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
