4வது முறையாக 73வயது நடிகருடன் இணைந்த நயன்தாரா.. வெளிவந்த புகைப்படம்
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4வது முறையாக கூட்டணி
இந்த வரிசையில் தற்போது புதிதாக மம்மூட்டியின் MMMN படத்திலும் கமிட் ஆகியுள்ளார். ஆம், இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் MMMN திரைப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.
இன்று துவங்கிய இப்படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதற்குமுன் ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் என மூன்று திரைப்படங்களில் மம்முட்டி - நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில், நான்காவது முறையாக MMMN படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து மோகனன்லாலும் நடிக்கிறார். மேலும் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நடிகை ரேவதி, ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
