லோகேஷ் கனகராஜ் படத்திலிருந்து விலகிய நடிகை நயன்தாரா.. காரணம் என்ன
லோகேஷ் - நயன்தாரா
நடிகை நயன்தாரா முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என சில மாதங்களுக்கு முன் திரை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்தது.

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இல்லை, தயாரிக்கும் படத்தில் என்றனர். இப்படத்திற்கு லோகேஷ் கதை எழுதியுள்ளார், அவருடைய நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் தான் இப்படத்தை இயக்குகிறார்.
ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது.
விலகிய நயன்தாரா
ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, நயன்தாரா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இதனால் அவருக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைப்பது என்ற முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாகவும், கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ ராகவா லாரன்ஸ் தான் இப்படத்தின் ஹீரோ என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
ஒரே நாளில் ரூ.80,000 கோடி வருமானம்; மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி News Lankasri