பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை நயன்தாரா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியாகியிருந்தது.
முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக மட்டுமல்லாமல், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார்.
அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது.
மேலும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், மற்றும் இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு, மூத்த முன்னணி நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால், ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan