மும்பையில் பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்த நயன்தாரா! எதற்காக தெரியுமா?

By Parthiban.A Mar 06, 2023 04:00 PM GMT
Report

நயன்தாரா

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு தொடர்ந்து பல பிரச்சனைகளை தான் சந்தித்து வருகிறார்கள். இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்ற சர்ச்சை, பதிவு திருமணத்தை மறைத்த சர்ச்சை என வரிசையாக விமர்சனத்தை சந்தித்தனர்.

அதன் பின் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருந்த AK62 படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அடுத்து அவர் எந்த நடிகர் உடன் கூட்டணி சேர போகிறார் என இதுவரை அறிவிக்கவில்லை.

மும்பையில் பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்த நயன்தாரா! எதற்காக தெரியுமா? | Nayanthara Meet Sanjay Leela Bhansali In Mumbai

பாலிவுட் இயக்குனருடன் சந்திப்பு

நயன்தாரா ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. அங்கு நயன்தாரா உடன் விக்னேஷ் சிவனும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து இருக்கிறார்கள்.

நயன்தாராவை சஞ்சய் லீலா பன்சாலி வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவரது அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. 

விஜய் பற்றிய கேள்விக்கு எஸ்ஏசி கோபமான பதில்! அப்படி என்ன கேள்வி பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US