வெளிவந்த நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பட ஃபஸ்ட் லுக்... இதோ
மூக்குத்தி அம்மன்
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்போது 2ம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார்.
இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஃபஸ்ட் லுக்
2ம் பாகத்தில் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா, யோகி பாபு, ஊர்சவி, அபுநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி என பலர் நடிக்கின்றனர்.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக படம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார். ஆயுத பூஜை ஸ்பெஷல் நாளில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.