பாலிவுட்டிலிருந்து தேடிவரும் கதைகள்.. இத்தனை படங்களை லைன் அப் வைத்துள்ளாரா
நயன்தாரா
20 ஆண்டுகளில் நயன்தாரா 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வருகிறார். மாயா, அறம், கனெக்ட் போன்ற ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டிவருகிறாராம்.
லைன் அப்
அடுத்த மாதம் வெளியாகவுள்ள அன்னபூரணி என்ற திரைப்படம் நயன்தாராவின் 75 வது படமாகும். இதற்கிடையே இவர் நடிகர் மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் டெஸ்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதனை அடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் நயன்தாரா துரை செந்தில் குமாரின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் நடக்கிறது.
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
பாலிவுட் விஷயத்தில் பொறுமையாகப் படங்களைத் தேர்வு செய்யுங்கள் என்று இயக்குனட் அட்லீ அறிவுரை கூறியுள்ளாராம். அதனால் நயன்தாரா கதைகளை மட்டும் கேட்டு வருகிறாராம்.