வெளிவந்தது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அப்டேட்.. இத்தனை கோடியா?
மூக்குத்தி அம்மன்
கடந்த 2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இப்படம் நேராக OTT தளத்தில் வெளிவந்தது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியால் இதன் 2 - ம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கடவுள் மேல் இருக்கும் மக்களின் நம்பிக்கையை வைத்து நாட்டில் நடக்கும் முக்கிய விஷயம் குறித்து இப்படம் பேசியிருக்கும். இந்த 2ம் பாகத்திலும் நடிகை நயன்தாரா தான் நடிக்கிறாராம், ஆனால் இந்த முறை சுந்தர்.சி இயக்குகிறார்.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்க உள்ளனர். இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
