நயன்தாராவிற்கு பப்ளிசிட்டி வெறி வந்துருச்சு.. குழந்தையால் வெடித்த சர்ச்சை
நயன்தாரா குழந்தை சர்ச்சை
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டனர். திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலமாக தான் இந்த இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார்கள் என்று தகவல் வெளியானது.

இதன்பின் சட்டத்தின் விதி முறைகளை மீறி தான் இந்த இரட்டை குழந்தைகளை நயன்தாரா பெற்றுக்கொண்டுள்ளார் என்று பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பப்ளிசிட்டி வெறியா
இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

’இன்ஸ்டாகிராமில் நயன்தாரா தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்று பதிவிட்டது அந்த விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த அல்ல, அவருடைய பப்ளிசிட்டிக்காக தான். நயன்தாராவிற்கு பப்ளிசிட்டி வெறி வந்துருச்சு.
ஏற்கனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளிநாட்டிற்கு சென்ற போது அங்கு இருவரும் நெருக்கமாக மூக்கோடு மூக்கு உரசும் புகைப்படங்களை எதற்க்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். உங்களுடைய பர்சனல் விஷயத்தை பர்சனலாக தான் வைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களுக்கு 10 மணிக்கு முன் வர உத்தரவு - மீறினால் சட்ட நடவடிக்கை IBC Tamilnadu
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri