நயன்தாராவின் இந்த திரைப்படமும் OTT-யில் ரிலீஸா ! என்ன திரைப்படம் தெரியுமா?
தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.
இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படமும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் மலையாளத்தில் உருவாகி வந்த கோல்ட் படத்தின் படப்பிடிப்பையும் நயன்தாரா முடித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் O2, இப்படத்தை ஜிகே வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் O2 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri