விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா.. சம்பளம் தான் பிரச்சனையா?
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி என்ற படத்தை தொடங்கி இருக்கிறார். அவர் அஜித்தின் அடுத்த படம் இயக்க இருந்த நிலையில் அது ட்ராப் ஆனது. அதன் பின் தான் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐசி படத்தை தொடங்கி இருக்கிறார்.
படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது எல்ஐசி என டைட்டில் வைப்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது. டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது.

படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியாக நடிக்கிறார். மேலும் ஹீரோவின் அக்கா ரோலில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிறார் எனவும் முன்பு தகவல் பரவியது.
ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா சம்பளம் 10 - 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    