திரிஷா இல்லனா நயன்தாரா.. அஜித்துக்கு ஜோடியாக போவது யார்?
அஜித்தின் ஏகே 62
அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.
ஏகே 62 எனும் அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முதல் முறையாக இப்படத்தில் நடிக்க ரூ. 105 கோடி அஜித் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
திரிஷா இல்லனா நயன்தாரா
இப்படத்தின் அறிவிப்பு வந்தபோது, ஏகே 62வில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போவதாகவும், அதற்காக ரூ. 10 கோடி நயன்தாரா சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது நயன்தாரா அல்லது திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் இறுதியில் யார் கமிட் ஆகிறார் என்று..