டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகருக்கு மிகப்பெரிய உதவி செய்து வரும் நயன்தாரா.. அவரே கூறிய தகவல்
டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ்
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்க சசிகுமார், சிம்ரன் உடன் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் சசிகுமாரின் இளைய மகனாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திர நடிகர் கமலேஷ் ஜெகன். இப்படத்திற்கு பின் இவருக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் ராட்சசி, பிஸ்க்கோத், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் இதற்கு முன் நடித்துள்ளார்.
நயன்தாரா செய்யும் உதவி
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நேரத்தில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும், கமலேஷை அழைத்து பேசியுள்ளார். அப்போது அவருடைய ஸ்கூல் பீஸை தாங்கள் ஏற்று கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பேட்டியில் பேசிய கமலேஷ், "விக்னேஷ் சிவன் சாரும், நயன்தாரா மேடம் தான் எனக்கு பீஸ் கட்டுறாங்க. படப்பிடிப்பின் இறுதி நாளில் என்னை அழைத்து இதுகுறித்து பேசினார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.