விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். மேலும் அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.
அது அந்த நேரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. திருமணம் ஆகி சில மாதங்களில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என நயன்தாரா விசாரணை அதிகாரியிடம் சான்றிதழை கொடுத்து விளக்கம் கொடுத்தார். அதற்கு பிறகு தான் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
அதற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் பர்சனல் போட்டோக்களையும் தங்கள் குழந்தைகளின் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட தொடங்கி விட்டனர். அவர்கள் போட்டோக்களை வெளியிடாமல் சில காலம் இருந்தால் விவாகரத்து என வதந்தி பரவுவது அடிக்கடி நடந்து வருகிறது.
20 நாள் பிரிவு..
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார்.
அவரை மிஸ் செய்ததாகவும், 20 நாள் கழித்து பார்க்கும்பிபோது வந்த உணர்ச்சி எப்படி இருந்தது என சொல்ல முடியவில்லை என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார்.