நயன்தாரா சொந்தமாக வைத்துள்ள பிரைவேட் ஜெட் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்
நயன்தாரா
மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து, இன்று இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் நயன்தாரா.

இவர் நடிப்பில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நயன்தாரா அடுத்து சல்மான் கானுடன் இணைந்து தனது இரண்டாவது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.
பிரைவேட் ஜெட் மதிப்பு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பிரைவேட் ஜெட்டில் பயணிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ள ஒரே ஒரு தென்னிந்திய நடிகை நயன்தாரா மட்டும்தான். இந்த பிரைவேட் ஜெட் மூலம்தான், கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் படப்பிடிப்பு, வெக்கேஷன் என சென்று வருகிறார் நயன்தாரா என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா சொந்தமாக வைத்துள்ள இந்த பிரைவேட் ஜெட் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதை வெறும் ஆடம்பரம் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது கடின உழைப்பால் எந்த உயரத்தையும் தொட முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார் நயன்தாரா.
