ஷாருக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா.. இவ்வளவு பெரிய வாய்ப்பை தவறவிட்டாரா
நயன்தாரா
நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலமாக தான் நயன்தாரா பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால், இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நயன்தாரா பெற்றுள்ளார். ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருப்பார்.
நோ சொன்ன நயன்தாரா
ஆனால், முதன் முதலில் இந்த ரோலில் நடிக்கவிருந்தது நடிகை நயன்தாரா தானாம். படத்தின் கதை தென்னிந்தியாவில் நடக்கும்படி அமைந்திருந்ததால், அப்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருந்த நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர் ஆனால், இந்த வாய்ப்பை நயன்தாரா மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
நயன்தாரா அந்த சமயத்தில் தனது திரை வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுத்து வந்ததாகவும், புதிய பாலிவுட் படத்தில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொள்ள தயங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்மின்றி கால்ஷீட் பொருந்தாததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் நயன்தாரா அந்த படத்தில் நடிக்கவில்லை. அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்தார்.