மீண்டும் முன்னாள் காதலுடன் இணையும் நடிகை நயன்தாரா? சப்ரைஸுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..
தமிழில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் இணைந்த ஜோடி தான் சிம்பு மற்றும் நயன்தாரா.
இதன்பின் இவர்கள் இருவரும் காதலில் ஈடுபட்ட, அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததை நாம் அறிவோம்.
ஆனால் காதல் முறிவிற்கு பிறகு இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஜோடிகளாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில், மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாம்.
ஆம் ராம் இயக்கத்தில் சிம்பு நடிக்க போவதாக கூறப்படும் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க போவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan