நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்தா? பரவிய செய்திக்கு பதிலடி கொடுத்து நயன்தாரா போட்ட பதிவை பாருங்க
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருட காதலுக்கு பிறகு 2022ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டபோது அது சர்ச்சைஆனது, அப்போது தான் தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடந்துவிட்டது என்ற உண்மையை அவர்கள் கூறினார்கள்.
அதனால் அவர்கள் பிரம்மாண்டமாக நடத்திய திருமணம் பெயரளவில் நடந்த ஒரு திருமணம் தான் என விமர்சனங்களும் எழுந்தது.
தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரண்டு மகன்கள் உடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர்.
வதந்திக்கு பதிலடி
இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா கணவர் மீது அதிருப்தியில் ஒரு பதிவை போட்டதாகவும், அதனால் அவர்கள் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் ஒரு செய்தி பரவியது.
ஆனால் அது பற்றி நயன்தாரா இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்து ஒரு பதிவை போட்டிருக்கிறார். தங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான் என விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ பாருங்க.


கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
