கிண்டல் செய்த மாளவிகாவிற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. காரணம் இதுதான்
மாளவிகா மோகனன் கிண்டல்
மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவின் நடிப்பு குறித்து கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார்.

அவர் கூறியதில் ' ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர் போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் ' என்று கூறியிருந்தார்.
நயன்தாராபின் பதிலடி
இதில் அவர் நயன்தாராவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது அதற்கு நயன்தாராவே பதிலடி கொடுத்துள்ளார்.
கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, இது குறித்து பேசிய பொழுது ' ஒரு ரியல் படம் பண்ணுவதற்கும், கமர்ஷியல் படம் பண்ணுவதற்கும் வித்தியாசம் உண்டு. அந்த படத்தில் இயக்குனர் என்னை அப்படி தான் நடிக்க சொன்னார். அதுதான் கமர்ஷியல் படங்களுக்கு தேவை என்றும் அவர் எண்னிடம் கூறினார் ' என்று நயன்தாரா பேசியிருந்தார்.

இதை தற்போது ரசிகர்கள் இரு வீடியோவையும் இணைத்து வைத்து சரியான பதிலடி கொடுத்துள்ளார் நயன்தாரா என கூறி வருகிறார்கள்.
#Nayanthara's Reply to Malavika Mohanan..? pic.twitter.com/YHNxZE1NpL
— Laxmi Kanth (@iammoviebuff005) December 21, 2022
லத்தி சார்ஜ் திரைவிமர்சனம்