மூக்குத்தி அம்மன் 2வில் நயன்தாரா இப்படியொரு ரோலில் நடிக்கிறாரா?.. வெளிவந்த விவரம்
மூக்குத்தி அம்மன்
நயன்தாரா நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று தான் மூக்குத்தி அம்மன். சாமி கதையை வைத்து நிறைய விஷயங்களை கூறியிருப்பார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி.
மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தின் 2ம் பாகம் வரப்போவதாக எப்போதோ தகவல் வந்துவிட்டது.
படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் பிஸியாக நடந்து வருகிறது.
கதாபாத்திரம்
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர்.சி அவர்கள் தான் இயக்குகிறா.
இதில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் நயன்தாரா அம்மனாக மட்டுமின்றி போலீசாகவும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
