விக்னேஷ் சிவனுடன் விவாகரத்து சர்ச்சை.. நயன்தாரா வெளியிட்ட ஷாக்கிங் விஷயம்
விவாகரத்து சர்ச்சை
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் ஒன்று பரவியது.
6 வருடங்களாக இருவரும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன்தாரா. கணவர், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள் என தகவல் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா விவாகரத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மீண்டும் மீண்டுமா
இந்த நிலையில், நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் umm.. I'm lost என பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்த விவாகரத்து சர்ச்சை பரவு துவங்கிவிட்டது.
விவாகரத்து சர்ச்சை குறித்த பதிவா இது, அல்லது ஏதேனும் படம் அல்லது விளம்பர படம் குறித்து பதிவா இது என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.