டாக்சிக் படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்.. இரண்டு மடங்கா?
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்து வர இருக்கும் படம் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சர்ச்சையில் சிக்கியது.
வீடியோவின் தொடக்கத்தில் வரும் ஒரு காட்சி தான் இதற்க்கு காரணம். அதை பற்றி பெண்கள் அமைப்பினர் மற்றும் இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நயன்தாரா சம்பளம்
டாக்சிக் படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். அவர் கங்கா என்கிற ரோலில் நடிப்பதாக சமீபத்தில் போஸ்டர் உடன் அறிவிப்பும் வந்தது.
இந்த ரோலில் நடிப்பதற்காக நயன்தாரா 18 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
அவரது முந்தைய படமான Mana Shankara Vara Prasad Garu படத்தில் நடிக்க அவர் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது யாஷ் உடன் நடிக்க அவர் சம்பளம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri