அஜித்துடன் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நயன்தாரா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இது தவிர, கனெக்ட் மற்றும் காட் பாதர், கோல்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாங்கியுள்ள புதிய காரின் புகைப்படம் வெளியாகியிருந்தது.
தமிழ் திரையுலகில் அதிகளவில் ஒர்கவுட் ஆன ஜோடிகளில் ஒன்று அஜித் மற்றும் நயந்தாரா ஜோடி. பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், கடைசியாக அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம் சுமார் ரூ. 187 கோடி வசூல் செய்த சாதனை படைத்தது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதற்காக நடிகை நயந்தாரா ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.